• பதிவு
  • உள்நுழை
  • முகப்பு
  • நாடுகள்
    • அமெரிக்கா
    • சிங்கப்பூர்
    • மொரிசியஸ்
    • மலேசியா
  • பொது மன்றம்
  • ஆவணங்கள்
  • வலைப்பதிவு
  • பதிவு
செய்தி
Questions about Portal?  Email portal@catamilacademy.org

தமிழ் வகுப்பில் எந்த அளவுக்கு இலக்கணம் சொல்லிக்கொடுக்கலாம்?

POSTED BY tamil edu - 4:47 PM |November 15, 2016 ⋅ 6  Comments
  • தமிழ் வகுப்பில் இலக்கணம் சொல்லிக்கொடுப்பது எப்படி? எந்த அளவுக்கு சொல்லிக்கொடுக்கலாம். புலம்பெயர் சூழலில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்படி சொல்லிக்கொடுத்தால் அவர்களுக்கு எளிமையாக போய்ச் சேரும்?


    போன்ற கேள்விகள் நம்மிடம் உள்ளன. இவை அவசியமான கேள்விகளும் கூட.

    எந்தவொரு மொழிக்கும் இலக்கணம் தான் அடிப்படை விதிகளை வகுத்துக் கொடுக்கிறது. இலக்கணம் இல்லாமல் எந்தவொரு மொழியும் இருக்க முடியாது, இலக்கண விதிகள் இல்லாமல் ஒரு மொழியை சரிவர பயன்படுத்தவும் முடியாது. இதில் யாருக்கும் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால், அதை எப்படி சொல்லிக்கொடுப்பது, புலம்பெயர் தமிழ்ப் பிள்ளைகளுக்கு எப்படி கொண்டுசெல்வது என்கிற விஷயத்தில் நிறையவே மாற்றுக்கருத்துக்கள் உள்ளதை மறுக்கவும் முடியாது.

    மொழிக்கல்வி பற்றி எந்தவொரு கேள்வியும் விவாதமும் வந்தாலும் எனக்கு முதலில் தோன்றுவது நாம் நம் தாய் மொழியை எப்படி கற்றுக்கொண்டோம். நமக்கு எந்த அளவு இலக்கணம் சொல்லிக்கொடுக்கப்பட்டது. 3 வயதில் இலக்கணப் பிழையில்லாமல் நம்மால் பேச முடிந்ததற்கு எந்தவிதமான, எப்படிப்பட்ட இலக்கணப் பயிற்சி தேவைப்பட்டது? அதுபோல புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பிள்ளைகள், நாம் பள்ளிக்கு போகும் முன் நமக்கிருந்த அளவு மொழித்திறன் பெற எந்த அளவு இலக்கண பாடங்கள் கொடுக்க வேண்டும் என்பது தான் பதிலாக வருகிறது.

    அதற்காக இலக்கணம் சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை என்று சொல்லவில்லை. மொழியை அவர்கள் பயன்படுத்தும் போது இலக்கண விதிகளின் பயன்பாடு தானாக அவர்களுக்கு புரிய வேண்டும்படி பயிற்சியளிக்க வேண்டும் என்பதே நான் கற்றுக்கொண்டது.

    இலக்கண விதிகளை மட்டும் தேவைக்கு மீறி சொல்லிக்கொடுத்து அவர்களை கஷ்டப்படுத்தவும் கூடாது. அதே சமயத்தில் அவர்களுக்கு வாக்கிய அமைப்பை உருவாக்க என்ன செய்யவேண்டும் என்கிற தயக்கமும் வரக்கூடாது.

    இலக்கண விதிகளை சொல்லிக்கொடுத்து மொழியை கற்றுக்கொடுப்பது ஒரு வகை. மொழியை அறிமுகப் படுத்தி, மொழியைப் பயன்படுத்த வைத்து அதன் மூலம் மொழி விதிகளை அவர்கள் உணரவைப்பதன் மூலம் இலக்கணம் சொல்லிக்கொடுப்பது இன்னொரு வழி. இரண்டாவது வழியே பயனுள்ள வழி என்கிறார் மொழியிலாளர் ஸ்டீபன் க்ரேஷன் அவர்கள்.

    இலக்கண வழி மொழிக்கல்வி பற்றி க்ரேஷன் அவர்கள் சொல்வதைப் பார்ப்போம்.

    "I have a Ph,D in Grammar. Grammar was my life. I taught ESL classes for decades using Grammar based approach. I strongly believed grammar approach is the best way to teach a language. After several years of experience in teaching ESL and several studies, I learned that the grammar based language teaching does not work. We need a better way to teach a language. After studying how we acquire languages and we acquire our first language, I conclude that the better way to teach a language is to follow the Natural Approach. Help  the students with enough comprehensible input. After enough comprehensible input and after enough language concepts are built in the subconscious mind, the speech will emerge. After the emergence of the speech, the grammar (language) rules will already be there. We all learn the language the same way. The language is learned one way and only way. That is, the language is acquired when the message is understood in a low anxiety environment."

    What do the experts in the field recommend about teaching grammar.

    Dr. Kumar:

    Deductive Vs Inductive grammar teaching. Expose the learners to contextual language environment. They will discover the grammar rules. This is Inductive approach.

    Dr. Krashen

    Comprehension Theory Vs Skill Building.

    Give them comprehensible input that has good amount of grammar concepts. From this they learner will understand and master grammar. 

    Dr. Ray

    We do not teach grammar explicitly. We give them comprehensible input that has good amount of grammar concepts. We do pop-up grammar. That is instead of giving grammar exercises, we give them lots of language input and when a question comes why certain things are so, we touch the grammar very lightly. From this they learner will understand and master grammar concepts. We delay teaching explicit grammar as late as possible. We teach them in Advance classes since the standardized tests require them.

    ஒரு மூன்று வயது குழந்தை பேசுவதை கவனிப்போம். நான் 10 வருடம் ஆங்கிலம் படித்தும் ஆங்கிலம் பேச முடியாமல் கஷ்டப்பட்டேன். எனக்கு ஆங்கில இலக்கணம் நன்றாகவே தெரிந்திருந்தது. நிறைய வார்த்தைகளும் கற்றிருந்தேன். இருந்தாலும் அந்த மூன்று வயது குழந்தை அளவுக்கு என்னால் பேச முடியாதது ஏன்? இலக்கணம் கற்காமல் சரியான இலக்கணத்தோடு அந்த குழந்தைக்கு எப்படி பேச முடிகிறது? இலக்கணம் நன்கு கற்றும் என்னால் பேச முடியாததற்கு என்ன காரணம்?

    இலக்கணம் கற்க இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறை நாம் ஆங்கில வகுப்பில் கற்றது போல இலக்கண விதிகளை விளக்கி அதைக் கொண்டு தேர்வு எழுத வைத்து புரியவைப்பது. இரண்டாவது முறை மொழியை கற்றுக்கொண்டு, அதை பயன்படுத்தி, சரளமாக பேசியபின் அதன் மூலம் இலக்கண வழிகளை புரிந்துக்கொள்வது.

    இதில் எந்த வழி நல்ல பலனைக் கொடுக்கிறது? மூன்று வயதுக் குழந்தை சரியான இலக்கணத்தோடு பேச அதிகம் உதவியது எது என்று பார்க்கும் போது இரண்டாவது முறையே என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    எனவே நம் வகுப்புகளில் மொழித்திறன் வளர்க்க முக்கியத்துவம் தருவோம். பின் மாணவர்கள் நன்றாக பேசியபின் இலக்கண விதிகளை சொல்லிக் கொடுப்போம்.
     
    Taken from: http://tamilacquisition.blogspot.com/2015/01/blog-post.html
     

  • லோகநாதன் வெங்கடாசலம்

    11:01 PM|November 20, 2016

    நன்றி செல்வி! நான் இங்கு மேலே குறிப்பிட்டுள்ளது போல இது குறித்து மாற்றுக்கருத்துகள் நிறையவே உள்ளதை பார்க்கிறோம். நான் சொன்னது போல இது நான் கற்றுக்கொண்டது என்று குறிப்பிட்டுள்ளேன். நாம் கலந்து பேசி நம் மாணவர்களுக்கு எது "தேவையோ" அதை வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, இன்று நம் HSCP மாணவர் ஒருவர் "பெயரெச்சம் பற்றி தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்." என்று கேட்டார். அது ஒரு நல்ல கேள்வி. அதற்கு நான் சொன்ன பதில் எனக்கு திருப்தியானது அல்ல என்று எனக்கு தெரியும். நான் சொன்ன உதாரணம் "நாங்கள் இங்கு வந்து உங்களிடம் பேசினோம்" என்ற வாக்கியத்தில் "நாங்கள் இங்கு வந்து" என்று சொன்னால் அது முழுப் பொருளை தராது. அதனால் அது முழுப்பொருளை தர அதற்கு இன்னொரு வார்த்தை தேவைப்படுகிறது என்று சொன்னால் மட்டும் போதுமே. இதற்குப் பெயர் "வினையெச்சம்", "பெயரெச்சம்" என்கிற label ஏன் அந்த மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது? "நாங்கள் இங்கு வந்து" என்பதை கேட்கும் போதே இது சரியல்ல என்கிற ஒரு தெளிவு அவர்களுக்கு வரவைக்க வேண்டியது அவசியம் இல்லையா? இதைத்தான் Dr. Blaine Ray, the developer of the TPRS technique, சொல்கிறார். இலக்கண விதிகளைப் படிக்கிறோம், வெள்ளிக்கிழமையன்று தேர்வில் அதை எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம். ஆனால், அடுத்த திங்கட்கிழமையே மறந்து விடுகிறோம். பிறகு எதற்கு இந்த இலக்கண விதிகளை சொல்லிக்கொடுக்க இவ்வளவு பாடுபடுகிறோம்? - இதுவும் Dr Ray கேட்கும் கேள்விதான். Instead why can't we spend more time and energy in the development of language skill through using the language in interesting contexts?
    லோகநாதன் வெங்கடாசலம்

    1:33 AM|March 20, 2017

    Please see the below article by Dr. Krashen on teaching grammar. http://www.sdkrashen.com/content/articles/teaching_grammar_why_bother.pdf
    tamil edu

    6:24 PM|December 6, 2017

    hello italics link
    quotes

    tamil edu

    8:42 PM|December 6, 2017

    Tamil testing தமிழ் டெஸ்டிங்
    tamil edu

    11:01 PM|November 20, 2016

    நன்றி செல்வி! நான் இங்கு மேலே குறிப்பிட்டுள்ளது போல இது குறித்து மாற்றுக்கருத்துகள் நிறையவே உள்ளதை பார்க்கிறோம். நான் சொன்னது போல இது நான் கற்றுக்கொண்டது என்று குறிப்பிட்டுள்ளேன். நாம் கலந்து பேசி நம் மாணவர்களுக்கு எது "தேவையோ" அதை வைத்துக்கொள்வோம். உதாரணத்துக்கு, இன்று நம் HSCP மாணவர் ஒருவர் "பெயரெச்சம் பற்றி தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்." என்று கேட்டார். அது ஒரு நல்ல கேள்வி. அதற்கு நான் சொன்ன பதில் எனக்கு திருப்தியானது அல்ல என்று எனக்கு தெரியும். நான் சொன்ன உதாரணம் "நாங்கள் இங்கு வந்து உங்களிடம் பேசினோம்" என்ற வாக்கியத்தில் "நாங்கள் இங்கு வந்து" என்று சொன்னால் அது முழுப் பொருளை தராது. அதனால் அது முழுப்பொருளை தர அதற்கு இன்னொரு வார்த்தை தேவைப்படுகிறது என்று சொன்னால் மட்டும் போதுமே. இதற்குப் பெயர் "வினையெச்சம்", "பெயரெச்சம்" என்கிற label ஏன் அந்த மாணவர்களுக்குத் தேவைப்படுகிறது? "நாங்கள் இங்கு வந்து" என்பதை கேட்கும் போதே இது சரியல்ல என்கிற ஒரு தெளிவு அவர்களுக்கு வரவைக்க வேண்டியது அவசியம் இல்லையா? இதைத்தான் Dr. Blaine Ray, the developer of the TPRS technique, சொல்கிறார். இலக்கண விதிகளைப் படிக்கிறோம், வெள்ளிக்கிழமையன்று தேர்வில் அதை எழுதி நிறைய மதிப்பெண் பெறுகிறோம். ஆனால், அடுத்த திங்கட்கிழமையே மறந்து விடுகிறோம். பிறகு எதற்கு இந்த இலக்கண விதிகளை சொல்லிக்கொடுக்க இவ்வளவு பாடுபடுகிறோம்? - இதுவும் Dr Ray கேட்கும் கேள்விதான். Instead why can't we spend more time and energy in the development of language skill through using the language in interesting contexts?
    tamil edu

    5:30 AM|December 19, 2016

    சாப்பாட்டுக்கு உப்பு அவசியம். உப்பு இல்லையென்றால் சுவை இருக்காது. அதனால், உப்பை தேவையான அளவு உணவில் கலந்து சாப்பிடுகிறோம். உப்பு அவசியம் என்பதற்காக உப்பை மட்டும் தனியாக எடுத்து அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்ன ஆகும்?

கருத்து

தங்கள் கருத்துகளை பதிவு செய்ய உள்நுழைந்த பின் முயற்சி செய்யவும் -  உள்நுழை

பதிக
எனது புதிய பதிவு

tamil edu

எழுத்தாளர்கள் (14)

  • yuvaraj jaganathan (1)
  • லோகநாதன் வெங்கடாசலம் (7)
  • Vetriselvi Rajamanickam (1)
  • Mythili Parthiban (1)
  • Yamuna Balasubramanian (1)
  • Ezhil Rajarathinam (1)
  • Raji Arasan (1)
  • Nivedhitha Balasubramanian (1)
  • Arun Palaniappan (1)
  • kaavya chandrasekhar (1)
  • Shaini Shiva (3)
  • Tarini Jayakumar (1)
  • Baskaran Sivaraman (1)
  • Papu Gounder (1)
  • லட்சுமி பாலகிருஷ்ணன் (1)
  • Arun Mahizhnan (2)
  • Nataraja Perumal Nallathamby (1)
  • Parthiban Sundaram (1)
  • Narasimhan Ganapathi (1)
  • Vijayakumar Ramachari (1)
  • Manikandan Meyyappan (1)
  • Saravanan Subramanian (1)
  • Prethima Rengasamy (1)
  • Tamizh Pallikkoodam Inc (1)
  • Siva Pillai (1)
  • Vasu Renganathan (1)
  • Latha Muthukumar (1)
  • Anu Moorthy (1)
  • lakshmi lak (5)
  • lakshmi preya (1)
  • a b (1)
  • Ram Krish (1)

உலகத் தமிழ்க்கல்வி மையம்

  • முகப்பு|
  • பொது மன்றம் |
  • ஆவணங்கள்|
  • வலைப்பதிவு|
  • பதிவு

© 2016 உலகத் தமிழ்க்கல்வி மையம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

  • எங்களை பின்தொடர :